27வது திருமண நாளை கொண்டாடிய மோகன்லால்..!

Bookmark and Share

27வது திருமண நாளை கொண்டாடிய மோகன்லால்..!

வெள்ளித்திரையில் சிறந்த நடிகராக மட்டுமல்ல, இல்லற வாழ்க்கையிலும் சிறந்த குடும்பத்தலைவராக வலம் வருபவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். அதன் அடையாளம் தான் நேற்று தனது 27வது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது.

தனது மனைவி சுசித்ராவுடன் இணைந்து ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்த மோகன்லால் அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு 'பீலிங் குட்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மோகன்லாலின் மனைவி சுசித்ரா, மறைந்த தமிழ் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் மகள் ஆவார். பாலாஜியின் பூர்வீகம் கேரளா என்றாலும் இங்கே தமிழ்நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டவர் தான்.

அந்த வகையில் மோகன்லால் நமது தமிழ்நாட்டு மருமகன் என்கிற சிறப்பையும் தக்கவைத்துள்ளார். இவர்களுக்கு ப்ரணவ் என்கிற மகனும் விஸ்மாயா என்கிற மகளும் உள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே மோகன்லாலை திருமணம் செய்துகொள்ள விரும்பி அடிக்கடி கிரீட்டிங் கார்டுகளை அனுப்பி தன் மனதை கவர்ந்தார் சுசித்ரா என்று மோகன்லாலே கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, முதலில் இவர்களது ஜாதகம் பொருந்தவில்லை என்றும், பின்னர் அது ஜோதிடரின் தவறான கணிப்பு என்றும் தெரியவந்து திருமணம் நடைபெற்றதும் தனிக்கதை.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions