2 கோடி ரூபாய் கட்டணம் ஏன்? இயக்குனருக்கு மோகன்லால் பதில்

Bookmark and Share

2 கோடி ரூபாய் கட்டணம் ஏன்? இயக்குனருக்கு மோகன்லால் பதில்

கேரளாவில் நடக்க உள்ள தேசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் மோகன்லாலின் ‘லாலிசம்' இசை குழு நிகழ்ச்சியை நடத்துவதற்காக ரூ.2 கோடி சம்பளம் கேட்டிருப்பதற்காக இயக்குனர் வினயன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் இலவசமாக நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது மோகன்லால் தனது இசை குழு நிகழ்ச்சிக்காக பெரும் தொகையை ஏன் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு மோகன்லால் சார்பில் லாலிசம் இசை குழு நிறுவனர் ரதீஸ் வேகா பதில் அளித்திருக்கிறார். ‘மோகன்லால் எந்த கட்டணமும் இசை நிகழ்ச்சிக்காக வசூலிக்கவில்லை.

இசைக் குழுவில் பாடகர்கள் கார்த்தி, உதித் நாராயணன், ஹரிஹரன், சுஜாதா உள்ளிட்ட பலர் பாடல் பாடுவதுடன் இசை கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். அவர் களை அழைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு செலவுக்கே பெரும் தொகை தேவைப்படும்.

இதற்கான செலவை ஏற்பது இயலாத காரியம். இதை புரிந்துகொள்ளாமல் மோகன் லால் மீது புகார் கூறியிருப்பது அவருக்கு வேதனை அளித்திருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறாரே என்கிறார்கள்.

அவர் தனிப்பட்ட முறையில் வருவதற்கும் இசை குழு கலைஞர்களுடன் நிகழ்ச்சி நடத்துவதையும் ஒப்பிடக்கூடாது.இவ்வாறு ரதீஸ் வேகா கூறினார். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions