வினீத் சீனிவாசனின் கனவு “மோகன்லாலையும் என் அப்பாவையும் இணைத்து படம் இயக்குவது

Bookmark and Share

வினீத் சீனிவாசனின் கனவு “மோகன்லாலையும் என் அப்பாவையும் இணைத்து படம் இயக்குவது

மோகன்லால் - சீனிவாசன் கூட்டணி மலையாள சினிமாவில் எண்பதுகளில் என்பது ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரு சூப்பர் காம்பினேஷன். மோகன்லால், சீனிவாசனுக்கு இடையேயான ஒருவரை ஒருவர் காலைவாரிவிடும் கலாட்டாக்கள், அபரிமிதமான நட்பு ஆகியவை ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்க தவறியதேயில்லை.

இன்றும் டிவியில் காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட்ஹலோ மை டியர் ராங் நம்பர் நாடோடிகாட்டுசித்ரம்அக்கரே அக்கரே அக்கரே என இவர்கள் கூட்டணியில் வெளியான சில படங்களை ஒளிபரப்பினால், சேனல் மாற்றாமல் பார்க்கும் ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.. இந்த கூட்டணி கிட்டத்தட்ட 35 படங்களில் இணைந்து நடித்திருக்கிறது.

ஆனால் ஒரு நாள் வரும்என்கிற 2010ல் வெளியான படத்திற்கு பின்னர் இணையவே இல்லை இந்த கூட்டணி.. காரணம் என்ன என்றும் தெரியவில்லை. மலையாள சினிமாவில் தற்போது நம்பிக்கை தரும் இளைய இயக்குனராக உருவெடுத்திருக்கும் வினீத் சீனிவாசன், மோகன்லாலையும், தனது தந்தை சீனிவாசனையும் மீண்டும் ஒன்றிணைத்து படம் இயக்கவேண்டும் என்றும், அது தனது கனவுப்படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளதால் இது அடுத்த வருடத்தில் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions