மோகன்லாலை வீட்டில் நுழையவிடாமல் தடுத்த கூர்க்கா..!

Bookmark and Share

மோகன்லாலை வீட்டில் நுழையவிடாமல் தடுத்த கூர்க்கா..!

இன்றைய யூத் ட்ரெண்டில், ட்ரெய்லர் வெளியிடுவதற்கு முன்பே டீஸர் வெளியிடுவது என்பது சம்பிரதாய நடைமுறை ஆன பின்பு அதற்கு மோகன்லால் படம் மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன..? அப்படித்தான் சில தினங்களுக்கு முன், தற்போது மோகன்லால் நடித்துவரும் 'என்னும் எப்பொழும்' படத்தின் டீஸர் வெளியானது.

சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தில் 15 வருடங்கள் கழித்து மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் மஞ்சுவாரியர். இந்தப்படத்தின் டீஸர் தான் இப்போது கேரள ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

பெண்கள் மாத இதழின் சீனியர் ரிப்போர்ட்டரான மோகன்லால், வக்கீலான மஞ்சு வாரியரை பேட்டி எடுக்க செல்லும்போது வாசலில் நிற்கும் நேபாளி கூர்க்கா அவரை தடுப்பது போலவும் மோகன்லால் அவனுடன் மலையாளத்தில் பேச, அவனுக்கு அது புரியாமல் விரட்டுவது போலவும் இறுதியில் மோகன்லால் 'அட இது ஏற்கனவே நாம படிச்சது தான' என பேசுவது போலவும் அந்த டீஸரில் இடம்பெற்றுள்ளது.  

அதில் கடைசியாக மோகன்லால் பேசும் அந்த டயலாக், அவர் முப்பது வருடங்களுக்கு முன் 'காந்திநகர் செகன்ட் ஸ்ட்ரீட்' என்கிற  படத்தில் கூர்க்காவாக நடித்தபோது பேசப்பட்ட வசனம் என்பதுதான் டீஸர் இவ்வளவு ஹிட்டாக காரணம். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions