மோகன்லால் பற்றி பாலசந்தர் சொன்னது என்ன?

Bookmark and Share

மோகன்லால் பற்றி பாலசந்தர் சொன்னது என்ன?

இந்திய நடிகர்களை பொறுத்தவரை தி கம்ப்ளீட் ஆக்டர் என அனைவரும் ஏகமனதாக ஒப்புக்கொண்ட நடிகர் தான் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.  உலக நாயகன் கமலும், இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் கூட இந்த கருத்தை பலமுறை ஆமோதித்துள்ளார்கள். மோகன்லாலின் நெருங்கிய நண்பரான இயக்குனர் பிரியதர்ஷன் 25 வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து சித்ரம் என்கிற படத்தை இயக்கினார். முன்னெப்போதும் இல்லாத வகையில் தினசரி நான்கு காட்சிகளாக ஒரு வருடம் ஓடிய படம் அது.

அந்தப்படம் வெளியான சமயத்தில் இயக்குனர் சிகரம் பாலசந்தரை அழைத்துக்கொண்டு படம் பார்க்க சென்றாராம் பிரியதர்ஷன்.  படம் முடிந்து வெளியே வந்தபின் மோகன்லால் நடிப்பு பற்றி சிலாகித்து பேசிய பாலசந்தர்,  தனது சீடன் கமலுக்கும் மோகன்லாலுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்ததாக பிரியதர்ஷனிடம் கூறினாராம்.  அதாவது கமல் நடிக்கும்போது எப்போதுமே தான் கேமராவுக்கு முன்பு நிற்கிறோம் என்கிற ஒரு எச்சரிக்கை உணர்வுடன் நடிப்பார்.

ஆனால் மோகன்லால் நடிப்பை பார்க்கும்போது தனக்கு முன்னால் கேமரா இல்லை என்பது போலவும்,  வேறெங்கோ மறைவாக வைத்து படமாக்குகிறார்கள் என்கிற எண்ணத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறினாராம் பாலசந்தர். அதுமட்டுமல்ல, மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை பார்த்துவிட்டு மோகன்லாலுக்கு எனது சல்யூட் என்றும் பாராட்டியவர்தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்.


Post your comment





Related News
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
ரஜினி அடம்பிடித்து வைத்த டைட்டில்- படம் சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?
சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல்ஹாசன் நியாபகம் வருகிறதாம் பிரபல நாயகிக்கு- ஏன் தெரியுமா?
காஜல் மீது சமந்தாவுக்கு அப்படி என்ன கோபம்?
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா
கே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங்கம்
கமலஹாசனுக்கு, கே.பாலச்சந்தர் எழுதிய கடைசி கடிதம்
வாடகை சைக்கிளில், கசங்கிய ஃபோட்டோவுடன் சென்ற கமல்ஹாசன்...
பாலசந்தரின் காலை தொட்டு வணங்கிய இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions