'லாலேட்டன்' படத்தை இயக்கப்போகும் இரண்டு 'லால்'கள்..!

Bookmark and Share

'லாலேட்டன்' படத்தை இயக்கப்போகும் இரண்டு 'லால்'கள்..!

மலையாள வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான லாலின் தரிசனத்தை 'சண்டக்கோழி' படம் முதல் நாம் பார்த்து தானே வருகிறோம்.. நடிகராக மட்டுமின்றி மலையாளத்தில் பல வருடங்களாக ஒரு இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி வருபவர் தான் லால்.

தற்போது மோகன்லாலை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் லால். ஏற்கனவே இயக்குனர் சித்திக்குடன் இணைந்து சித்திக்-லால் என இரட்டையர் காம்பினேஷனில் மோகன்லாலை வைத்து படம் இயக்கியுள்ளார் லால், தனியாக படம் இயக்க ஆரம்பித்தபின் மோகன்லாலை வைத்து இன்னும் படம் இயக்கவில்லை.

அந்தக்குறை இப்போது தீரப்போகிறது. லால் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'கோப்ரா'... மம்முட்டியும் லாலும் இணைந்து நடித்திருந்தனர்.  இதுதவிர வரும் ஆனா வராது என்கிற ரேஞ்சில் நீண்ட நாட்களாக நடக்கும் பனிப்போர் முடிவுக்கு வந்து, மோகன்லாலை வைத்து இயக்குனர் லால்ஜோசும் அடுத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு படங்களும் வரும் 2016ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
ஹீரோயினை குஞ்சாக்கோ போபனுக்கு சிபாரிசு செய்த லால்ஜோஸ்
ஜீத்து ஜோசப் டைரக்சனில் நயன்தாரா..!
ஜீத்து ஜோசப் சொல்லாத ரகசியம்!
லால் vs லால் ; பத்து வருட பனிப்போர் முடிவுக்கு வருமா...?
துல்கர் சல்மானுக்காக த்ரில்லர் கதை எழுதுகிறார் லால்ஜோஸ்..!
லால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..!
“ஜீத்து ஜோசப் காப்பியடிக்கவில்லை” - உயர்நீதிமன்றம் \'பளிச்\' தீர்ப்பு..!
ரஷ்யாவில் மைனஸ் 6 டிகிரி குளிரில் சிக்கிய லால்ஜோஸ் டீம்..!
ஆர்யா-பிருத்விராஜை தொடர்ந்து மம்முட்டியை இயக்குகிறார் லிஜோ ஜோஸ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions