மோகன்லால் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆள் ரெடி..!

Bookmark and Share

மோகன்லால் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆள் ரெடி..!

'ஸ்பிரிட்' படத்தை தொடர்ந்து தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிக்கும் 'லோஹம்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

இன்னொரு கதாநாயகியாக நடிப்பதுடன் படத்தில் உதவி இயக்குனராகவும் வேலைபார்த்து வருகிறார் நடிகை மைதிலி. இது தவிர நடிகை மஞ்சு வாரியரும் நடிக்க இருப்பதாக தகவல்.

இந்த மூவரையும் தாண்டி படத்தின் கவர்ச்சிகரமான அம்சம் இருக்கவேண்டும் என்பதற்காக ஒரே ஒரு ஐட்டம் டான்ஸிற்காக நடிகை பியர்லி மானே என்பவரை இழுத்து வந்திருக்கிறார்கள்.

இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து துல்கர் நடித்த 'நீலாகாசம்' படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர். துல்கரின் நட்பால் அவருடன் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் 'ஞான்' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

இவரது திறமையை பார்த்த ரஞ்சித் மீண்டும் இப்போது தான் இயக்கும் 'லோஹம்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு தந்துள்ளார். அழைத்தது மலையாள திரையுலகம் போற்றும் பிரபல இயக்குனர் ரஞ்சித் என்பதால் ஐட்டம் டான்ஸ் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடனே ஒப்புக்கொண்டாராம் பியர்லி மானே..  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions