எதிர்பாராமல் உருவாகியுள்ள மோகன்லால் - மம்முட்டி மோதல்..!

Bookmark and Share

எதிர்பாராமல் உருவாகியுள்ள மோகன்லால் - மம்முட்டி மோதல்..!

இப்படி நடக்கும் என மோகன்லாலே நினைத்துப்பார்க்கவில்லை.. தனக்கும் மம்முட்டிக்கும் எதுவும் மோதல் வந்துவிடக்கூடாது (அட படங்களை ரிலீஸ் பண்றதுல தாங்க) என்பதில் மோகன்லால் மட்டுமல்ல, மம்முட்டியும் கவனமாக இருப்பார். அதற்கேற்ற வகையில் மம்முட்டி நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் சித்திரை விஷு பண்டிகை கொண்டாட்டமாக ரிலீசாவதை முன்னிட்டு, தான் நடித்த 'என்னும் எப்பொழும்' படத்தை 15 நாட்கள் முன்னதாக மார்ச்-27லிலேயே ரிலீஸ் செய்துவிட்டார்.

மம்முட்டிக்கு போட்டியாக அதே நாளில் அவரது மகன் துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' மட்டும் களத்தில் இருந்த சூழ்நிலையில் இப்போது மீண்டும் மோகன்லாலின் படம் ஒன்று சித்திரை விஷுவுக்கு ரிலீஸாகும் வகையில் விறுவிறுப்பான வேலைகள் நடந்துவருகின்றன.

அது வேறு எதுவுமில்லை.. மோகன்லால் கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்து இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான 'மைத்ரி' படம் தான். மலையாளத்தில் மோகன்லாலின் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக சில காட்சிகளை மட்டும் தனியாக ஷூட் பண்ணி படத்துடன் இணைத்துள்ளார்களாம்.

மலையாள டப்பிங்கையும் மோகன்லால் பேசி முடித்துவிட்டாராம். ஆக புத்தாண்டில் ஸ்டார் வார்ஸ் உறுதி என்கிறார்கள் மலையாள விநியோகஸ்தர்கள். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions