“மோகன்லாலை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்” - பொங்கிய மம்முட்டி..!

Bookmark and Share

“மோகன்லாலை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்” - பொங்கிய மம்முட்டி..!

கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் மோகன்லாலின் 'லாலிசம்' இசைக்குழுவினர் சொதப்பிவிட்டனர் என்றும் இந்த நிகழ்ச்சிக்காக மோகன்லால் 2 கோடி ரூபாய் வாங்கிவிட்டார் என்றும் விழா முடிந்த பின்னரும் கூட விமர்சன கணைகள் மோகன்லாலின் மீது பாய்ந்த வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக மலையாள திரையுலகை சேர்ந்த சிலரே இப்படி பேசி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான் தனது நண்பனுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் மெகாஸ்டார் மம்முட்டி. இன்று பத்திரிகையாளர்களை அழைத்த மம்முட்டி விமர்சகர்களுக்கு வேண்டுகோளும் எச்சரிக்கையும் விடுத்து பேசினார்.  

அதில், “தயவுசெய்து மோகன்லாலை வேட்டையாடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.. அவர் கேரளாவின் மிகச்சிறந்த நடிகர்.. அவரை அவர் வேலையை செய்யவிடுங்கள்.. தேசிய விளையாட்டு விழாவினை கெடுக்கும் விதமாக அவர் எதுவும் செய்துவிடவில்லையே.. பின்னே, இதுபோன்ற விவாதங்களால் பேசிப்பேசி தேசிய விளையாட்டு விழா சந்தோஷத்தையும் பெருமையையும் தயவுசெய்து நீங்கள் கெடுத்துவிடாதீர்கள்.

இது அவருடைய நண்பன் என்கிற முறையிலும், சக நடிகன் என்கிற முறையிலும் உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள்.. தயவுசெய்து இதில் உள்ளர்த்தம் கற்பித்துக்கொள்ளாதீர்கள்” என உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார் மம்முட்டி.   


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions