மோகன்லால் - மம்முட்டி மோதும் சூழல் தவிர்ப்பு..!

Bookmark and Share

மோகன்லால் - மம்முட்டி மோதும் சூழல் தவிர்ப்பு..!

சூப்பர்ஸ்டார் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது என்பது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம் தான். அப்படி நடந்தால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் கருத்து மோதல் முதல் தியேட்டர் மோதல் வரை ஆங்காங்கே நடப்பதும் வாடிக்கைதான்.

அதனால் தான் இதுவரை இரண்டு ஸ்டார்களும் தங்களது படங்கள் ரிலீஸாகும் தேதிகளுக்கு போதிய இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். சமீபத்தி வெளியான மோகன்லாலின் ’ரசம்’ படமும், மம்முட்டியின் ’பயர்மேன்’ படமும் கிட்டத்தட்ட 25 நாட்கள் இடைவெளி விட்டுத்தான் ரிலீசாகின.

ஆனால் வரும் சித்திரை விஷு பண்டிகையின்போது மோகன்லாலின் ’என்னும் எப்பொழும்’ படமும், மம்முட்டியின் ’பாஸ்கர் தி ராஸ்கல்’ படமும் ஒரே நாளில் வெளியாவதற்கான சூழல் உருவாகியது..

ஆனால் மோதலை தவிர்க்கும் விதமாக, இரு நடிகர்களும் தங்களுக்கும் செய்துகொண்ட ஏற்பாட்டின்படி, மோகன்லாலின் படம் மார்ச்-27ஆம் தேதியும், மம்முட்டியின் படம் ஏப்ரல்-14ஆம் தேதியும் ரிலீஸ் ஆகின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions