அப்பா படத்தில் மகன் அசிஸ்டண்ட் டைரக்டர் - இது எப்டி இருக்கு..?

Bookmark and Share

அப்பா படத்தில் மகன் அசிஸ்டண்ட் டைரக்டர் - இது எப்டி இருக்கு..?

நம்ம தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு சாதனை உண்டு அதாவது தனது தந்தை கமல் நடித்த படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றிய சாதனை தான் அது. சௌந்தர்யாவுக்கு தனது தந்தை சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து டைரக்ட் பண்ணும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மகன் ப்ரணவ்க்கு, தனது தந்தை நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்க்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே, அதுகூட மலையாள திரையுலகை பொறுத்தவரை புதிய சாதனை தான்.

மம்முட்டியின் மகன் துல்கர் ஹீரோவாகிவிட்டார். ஆனால் மோகன்லாலோ தனது மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று அப்போதே சொல்லிவிட்டார்.. நடிகரின் மகன் நடிகராகத்தான் வேண்டுமா என்ன..? சரி.. நடிப்பதில் தானே ஆர்வம் இல்லை.. இயக்குனர் ஆகமாட்டார் என்று அவர் சொல்லவிலையே..

மகனின் ஆர்வம் டைரக்சனில் தான் என்பது தெரிந்ததும் உடனே ஓகே சொன்ன மோகன்லால், தனக்கு 'த்ரிஷ்யம்' மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடமே தொழில் கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார்..

தமிழில் கமல் நடித்து 'த்ரிஷ்யம்' ரீமேக்காக உருவாகியுள்ள 'பாபநாசம்' படத்தில் ஜீத்து ஜோசப்பிற்கு உதவி இயக்குனராக தனது இன்னிங்க்சை ஆரம்பித்த ப்ரணவ்,, அடுத்து ஜீத்து ஜோசப் திலீப்பை வைத்து இயக்கிய  'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்திலும் உதவி இயக்குனராக தொடர்ந்தார். இப்போது மீண்டும் மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஜீத்து ஜோசப்.. அதிலும் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்க்கப்போகிறார் ப்ரணவ்.

ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு தயாராகிவிட்ட ப்ரணவ், நிச்சயம் ஒரு சிறந்த இயக்குனராக வரும் தகுதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார் என சிஷ்யனுக்கு ஏற்கனவே சர்டிபிகேட் கொடுத்துள்ளார் ஜீத்து ஜோசப். அனேகமாக இந்தப்படம் முடிந்ததும் ப்ரணவ் தனியாக படம் இயக்குவர் என்றே தெரிகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions