மோகன்லால்-பிருத்விராஜ் இணையும் படத்திற்கு கதை எழுதுகிறார் அனூப் மேனன்..!

Bookmark and Share

மோகன்லால்-பிருத்விராஜ் இணையும் படத்திற்கு கதை எழுதுகிறார் அனூப் மேனன்..!

நம்ம ஊரில் சமுத்திரக்கனி மாதிரி மலையாளத்தில் தன்னம்பிக்கை தருகின்ற கேரக்டர் என்றால் கூப்பிடுங்கள் அனூப் மேனனை என்று சொல்லும் அளவுக்கு அசத்துகிறார். ட்ராபிக் படத்தில் போலீஸ் அதிகாரியாக, '1983' படத்தில் கிரிக்கெட் கோச்சாக கலக்கிய அனூப் மேனன், கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான 'விக்ரமாதித்யன்' படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அனூப் மேனனனுக்கு நடிகன் என்பதை தாண்டி, கதாசிரியர், பாடலாசிரியர் என சில முகங்களும் உண்டு. அந்த வகையில் 'பியூட்டிபுல்', திருவனந்தபுரம் லாட்ஜ், 'ஹோட்டல் கலிபோர்னியா' மற்றும் கடந்த வரும் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான 'தி டால்பின்ஸ்' உட்பட சில வெற்றிப்படங்களில் ஒரு கதாசிரியராக தனது பங்களிப்பை தந்துள்ளார்.

கடந்த வருடம் பிரியதர்ஷன் இயக்கிய 'ஆமையும் முயலும்' படத்தில் அனூப் மேனன் லாட்டரி இன்ஸ்பெக்டராக நடித்தபோதே, தான் இயக்கும் அடுத்த படத்திற்கு நீங்கள் தான் கதை எழுதவேண்டும் என அவரிடம் அன்புக்கட்டளை போட்டுவிட்டார் பிரியதர்ஷன்.

மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் இருவரையும் இணைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக பிரியதர்ஷன் சொல்லியிருந்தாரே, அந்தப்படத்திற்குத்தான் அனூப் மேனன் கதையெழுத இருக்கிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions