ரஜினி பாணியில் படங்களை குறைக்க மோகன்லால் முடிவு..?

Bookmark and Share

ரஜினி பாணியில் படங்களை குறைக்க மோகன்லால் முடிவு..?

தொண்ணூறுகளில் படிப்படியாக தனது படங்களை குறைத்து வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையை கொண்டுவந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி. படங்களை குறைக்க குறைக்க ரஜினியின் மார்க்கெட் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது.

வருடத்திற்கு இரண்டு, மூன்று ரஜினி படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள், ரஜினியை வருடத்தில் ஒரு முறைதான், சில நேரம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் திரையில் காணலாம் என்கிற நிலை வந்தவுடன், அவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு உயர ஆரம்பித்தது.

ஆனால் மலையாள சூப்பர்ஸ்டார்கள் இந்த கணக்கிற்குள் வருவதில்லை. மலையாள சினிமாவை பொறுத்தவரை மார்க்கெட்டில் இருக்கும் எந்த நடிகருமே வருடத்தில் குறைந்தது ஐந்து முதல் ஆறு திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வாடிக்கையான ஒன்று.

காரணம் சூப்பர்ஸ்டார் என்றாலும் அங்கே சம்பளம் குறைவு என்பதால் நேரத்தை வீணாக்காமல் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம். தவிர விருது விழாக்கள், ஸ்டார் நைட்டுகள் மற்றும் விளம்பரங்கள் என எந்த ரூபத்திலாவது ரசிகர்களுக்கு தரிசனம் தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இது ஒருவகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு மனப்பான்மையை குறைத்து விடக்கூடும். சூப்பர்ஸ்டாரான மோகன்லால் இந்த உண்மையை இப்போதுதான் உணர ஆரம்பித்துள்ளாராம்.

அதனால் இனி ரஜினி பாணியில், படங்களின் எண்ணிகையை போகப்போக குறைத்து நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதுடன், தனது மார்க்கெட் வேல்யூவை உயர்த்தும் ஐடியாவிலும் இருக்கிறாராம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions