இந்தமுறை மோகன்லாலுக்கு ஆக்சன் சட்டைதான் தைக்கப்போகிறார் ரஞ்சித்..!

Bookmark and Share

இந்தமுறை மோகன்லாலுக்கு ஆக்சன் சட்டைதான் தைக்கப்போகிறார் ரஞ்சித்..!

கடந்த 2012ஆம் வருடம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய பெயரையும் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கிக்கொடுத்த படம் தான் 'ஸ்பிரிட்'.

கேரள அரசாங்கத்தால் சிறந்த விழிப்புணர்வு திரைப்படம் என பாராட்டப்பட்ட, சமூக பிரச்சனையை அலசும் படம் என தேசிய விருதும் பெற்ற இந்த 'ஸ்பிரிட்' படத்தை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித்.. தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து  தனது அடுத்த படத்தை இயக்குகிறார் ரஞ்சித்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பும் இரு தினங்களுக்கு முன்  துவங்கியது. கோல்டு காயின் மோஷன் பிக்சர்ஸ் எம்டியான பி.எம்.சசிதரன் கேமராவை ஆன் செய்ய, மாத்ருபூமி பத்திரிகையின் முதன்மை மேலாளரான கே.ஆர்.பிரமோத் முதல் கிளாப் அடித்து படப்படிப்பை துவங்கி வைத்தார்.

இந்தப்படத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாவே தயாரிக்கிறது. கடந்த முறை மோகன்லாலை ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு நடிக்க வைத்த ரஞ்சித், இந்தமுறை மோகன்லாலுக்கு ஆக்சன் சட்டைதான் தைக்கப்போகிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions