மோகன்லால் என்னை தவறாக பயன்படுத்தினார்: சரிதா நாயர் புகார்

Bookmark and Share

மோகன்லால் என்னை தவறாக பயன்படுத்தினார்: சரிதா நாயர் புகார்

சரிதா நாயர் சர்ச்சையில் நடிகர் மோகன்லால் சிக்கியுள்ளார். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல்களை பொருத்தி தருகிறேன் என்று கூறி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் சரிதா நாயர். இவ்வழக்கில் அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தன்னை சில அரசியல்வாதிகளும் ஒரு நடிகரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை விளக்கி ஒரு கடிதம் எழுதி வைத்து இருப்பதாகவும் கூறினார். பெயர் விவரங்களை வெளியிடவில்லை. ஆனாலும் கடிதத்தை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.

கடிதத்தை போட்டோகிராபர்கள் படம் எடுத்தனர். அப்போது கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் கேரள அரசியல்வாதிகள் சிலரும் சேர்ந்து என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த விவரம் போட்டோகிராபர்கள் எடுத்த படம் மூலம் அம்பலமானது.

மோகன்லால் பெயரை குறிப்பிட்டு உள்ளூரில் உள்ள மலையாள டி.வி. சேனல்கள் இந்த செய்தியை வெளியிட்டு வருகின்றனர். இதனால் மோகன்லால் அதிர்ச்சியில் இருக்கிறார். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions