”சத்யன் அந்திக்காடு எனது சகோதரர் போன்றவர்” - நெகிழும் மோகன்லால்..!

Bookmark and Share

”சத்யன் அந்திக்காடு எனது சகோதரர் போன்றவர்” - நெகிழும் மோகன்லால்..!

இயக்குனர் சத்யன் அந்திக்காடும், மோகன்லாலும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றால்  அது மோகன்லாலின் ஆக்சன் முகமூடியை எல்லாம் கழட்டி வைத்துவிட்டு, மோகன்லாலின் இன்னொரு பரிமாணத்தை காட்டுவதாக இருக்கும்.. இதற்கு நான்கு வருடங்களுக்கு முன் இவர்களது கூட்டணியில் உருவாகிய 'சினேக வீடு' திரைப்படம் ஒன்று போதும் சாம்பிளுக்கு.

தற்போது இவர்களின் கூட்டணியில் 'என்னும் எப்பொழும்' என்கிற படம் தயாராகி வருகிறது. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் 15வது படம் இது. இந்த 25 வருடங்களில், பதினைந்து படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பயணிக்க காரணம் இருவருக்குமான புரிதலும் விட்டுக்கொடுத்தலும் தான்.

சமீபத்தில் காதலர் தினத்தின்போது ஆதரவற்ற சிறுவர்களின் இல்லத்துக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் தனது அன்பை வெளிப்படுத்தினார் மோகன்லால். அதே போல அன்பின் அடிப்படையால் உருவான அந்த தினத்தில் அவரது ஆத்மார்த்தமான நண்பர்களையும் நினைத்து அவரது மனம் உலா வந்திருக்கிறது.

குறிப்பாக இயக்குனர் சத்யன் அந்திகாடு பற்றிய நினைவுகள் அவரை நெகிழ செய்துவிட்டனவாம். “இதுவரை எனக்கு கடினமான தருணங்கள் வந்தபோதெல்லாம் சத்யன் அந்திக்காடு என் கூடவே நின்றிருக்கிறார்.. நான் சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் போராடும்போது அவர் எனக்கு வழிகாட்டியுள்ளார்.

அவர் எனக்கு சகோதரரை போன்றவர். எங்கள் குடும்பத்தில் ஒருவர்” என தனது வலைப்பக்கத்தில் நெகிழ்ந்திருக்கிறார் மோகன்லால்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions