“மோகன்லால் தான் பெஸ்ட்” - பாலிவுட் கதாசிரியர் பாராட்டு..!

Bookmark and Share

“மோகன்லால் தான் பெஸ்ட்” - பாலிவுட் கதாசிரியர் பாராட்டு..!

இந்தியில் வெற்றிபெற்ற 'கஹானி' மற்றும் 'டி-டே' ஆகிய படங்களைப்பற்றி அறிந்தவர்களுக்கு அதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணகர்த்தாவான அந்தப்படங்களின் கதாசிரியர் சுரேஷ் நாயர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.

பெயரை பார்த்ததுமே மலையாளத்துக்காரர் என்பது பளிச்சென புரிந்தாலும் பத்து வருடங்களுக்கு மேலாக தனது கதை சொல்லும் திறமைகளையெல்லாம் பாலிவுட்டுக்கே தாரை வார்த்துக்கொண்டிருப்பவர்.

இப்போது டைரக்டர் ஜோஷியின் புண்ணியத்தில் சொந்தமண்ணில் ஒரு படத்தில் வேலை பார்த்து முடித்திருக்கிறார். ஆம்.. தற்போது மோகன்லாலை வைத்து ஜோஷி இயக்கி முடித்துள்ள 'லைலா ஓ லைலா' படத்திற்கு சுரேஷ் நாயர் தான் கதை எழுதியுள்ளார்.

எத்தனையோ முன்னணி பாலிவுட் நடிகர்களை பார்த்திருந்தாலும் இந்தப்படத்தில் மோகன்லாலின் டெடிகேஷனை பார்த்து அசந்துபோன சுரேஷ் நாயர், இதுவரை தான் பணியாற்றிய ஹீரோக்களிலேயே மோகன்லால் தான் பெஸ்ட் என புகழ்ந்துள்ளார்.

தற்போது தனது ட்ராபிக் படத்தை இந்தியில் இயக்கும் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, கதையில் உதவி செய்வதற்காக சுரேஷ் நாயரையும் தனது டீமில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions