மோகினி டீசர் ரிலீஸ் விவரம் இதோ!

Bookmark and Share

மோகினி டீசர் ரிலீஸ் விவரம் இதோ!

நாயகி படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பேய் படத்தில் நடித்து வருகிறார். மோகினி என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை மதுர, அரசாங்கம் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் லண்டனில் முடிவுக்கு வந்தது. இதில் மொத்தம் 90% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் பாங்காக்கில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நற்பெயரைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions