மொக்கப்படம் மொக்கப் பாடமானது!

Bookmark and Share

மொக்கப்படம் மொக்கப் பாடமானது!

விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கி வரும் படம் ஒரு பக்க கதை. இந்த படத்தை அவர் மற்றவர்களிடம் சொல்லும்போது, இந்த ஒரு பக்க கதை ஒரு பக்காவான கதையில் உருவாகி வருகிறது என்றுதான் சொல்கிறார்.

அந்த அளவுக்கு படத்தை பில்டப் கொடுத்து பேசி வருகின்றனர். இந்த நிலையில், ஆர்ட் டைரக்டர் வீரசமர் நடிக்கும் படத்திற்கு மொக்க படம் என்று பெயர் வைத்து அவர்களே படத்தை மட்டம் தட்டுவது போல் தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த நேரத்தில், நல்ல படம், சூப்பர் கதை என்று சொன்னாலே ரசிகர்களை தியேட்டருக்குள் கொண்டு வருவது கடினமாக இருக்கும் இன்றைய நிலையில், இந்த மாதிரி நாமளே மொக்கப்படம் என்று சொன்னால் எபபடி ரசிகர்கள் தியேட்டருக்குள் வருவார்கள் என்று சிலர் அவர்களிடம் கூறினார்களாம்.

அதனால், சற்று யோசித்த அப்படக்குழுவினர் இப்போது அந்த மொக்கப்படம் படத்திற்கு மொக்கப் பாடம் என்று ஒரு துணைக்காலை சேர்த்து டைட்டீலை மாற்றியுள்ளனர். இந்த தலைப்பு மாற்றத்தை திரையுலகைச்சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளார்களாம். அதனால் மொக்கப்படம் மொக்கப்பாடமானது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று அப்படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions