மொக்க படம் படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

மொக்க படம் படப்பிடிப்பு முடிந்தது!

வீரசேகரன் என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் வீரசமர். இவர் பல படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த அமலாபால்.

அதற்கு முன்பே விகடகவி என்ற படத்தில் அமலாபால் நடித்திருந்தபோதும், இந்த படம்தான் அவர் நடித்து தமிழில் முதன்முதலாக வெளியானது. அதையடுத்து சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த வீரசமர், இப்போது மொக்கப்படம் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக அமிர்தா நடிக்க, மா.கா.பா. ஆனந்தும் ஒரு ரோலில் நடித்திருப்பதோடு ஒரு பாடலும் பின்னணி பாடியுள்ளார். ஜெயந்திநாதன் இயக்கியுள்ள இந்த படம் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பர்ஸட் காப்பி ரெடியாகி விட்டது.

அதனால், தற்போது கோடம்பாக்கத்திலுள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த சினிமா நபர்களை அழைத்து அவர்களுக்கு ஷோ போட்டுக்காட்டி வருகிறார்கள். அதோடு, படம் பார்த்த பிரபலங்களிடம் அதுபற்றி கருத்து கேட்டும் அதை வீடியோவில் பதிவு செய்து வருகிறார்கள். இதை படம் திரைக்கு வரும்போது பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தப்போகிறார்களாம்.


Post your comment





Related News
தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் - தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்
முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்
பப்லிசிட்டி மோகத்தால் ப்ரொட்யூசர்களை பாதாளத்தில் தள்ளும் ஆரி? இங்கிலிஷ் பட இயக்குனர் ஆவேசம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions