ஏ.ஆர்.முருகதாசிடம் சான்ஸ் கேட்ட மோனல் கஜார்!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாசிடம் சான்ஸ் கேட்ட மோனல் கஜார்!

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த ஆமதாபாத் அழகி மோனல் கஜ்ஜார். கிருஷ்ணா நடித்த வனவராயன் வல்லவராயன், விக்ரம் பிரபு நடித்த சிக்ரம் தொடு ஆகிய படங்களில் நடித்தார்.

அதோடு, தெலுங்கில் நடித்து வந்தபோது அனுஷ்கா போன்று வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை பிடிக்காத இயக்குனர்கள் இவரை வளர்த்து விடவும் வரிந்து கட்டினர்.

ஆனால், தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதே மோனலின் நோக்கமாக இருந்ததால் அங்கு சில படங்களில் நடித்ததோடு கோடம்பாக்கத்துக்கு வந்து விட்டார்.

ஆனபோதும், தமிழில் நடித்த இரண்டு படங்களுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அதோடு, பின்னர் அவரை படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய சென்றவர்களிடம் 15 லட்சம் வரை அவர் சம்பளம் கேட்டதால் பின்வாங்கி விட்டனர் தயாரிப்பாளர்கள்.

ஆக, தற்போது தெலுங்கில் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் மோனல் கஜ்ஜார். அதோடு, அங்கிருந்தபடியே தமிழில் மீண்டும் பெரிய படங்களை கைப்பற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கும் அவர், சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாசை தொடர்பு கொண்டு,  உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அதை எப்படியேனும் நிறைவேற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம்.
அதோடு, அப்படி உங்கள் படத்தில் எனக்கு நடிக்க சான்ஸ் தந்தால் சம்பளம்கூட தேவையே இல்லை என்றும் கூறினாராம் மோனல் கஜ்ஜார். இருப்பினும், அவருக்கு சாதகமான பதிலை சொல்லாத ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது இந்தி படவேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் பியூச்சரில் நான் தமிழுக்கு வரும்போது உங்களை நடிக்க வைப்பது பற்றி யோசிக்கலாம் என்று கூறிவிட்டாராம்.

அதையடுத்தும்,  ஐதராபாத்தில் இருந்தபடியே சில கோலிவுட் டைரக்டர்களுக்கு போன் செய்து சான்ஸ் கேட்டு கொண்டிருக்கிறாராம் மோனல்.வை ராஜா வை படத்தை  வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் இன்றைய தேதியில் கோலிவுட்டில் நம்பர் ஒன் படநிறுவனம் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான்.

சில்லுன்னு ஒரு காதல் படத்தைத் தயாரித்து தன் கணக்கைத் துவக்கிய ஸ்டுடியோ கிரீன் வரிசையாக பல வெற்றிப் படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

சொந்தமாக படங்களை தயாரித்து, வெளியிட்டு வருவதோடு அட்டகத்தி படத்திலிருந்து மற்ற பல நிறுவனங்கள் தயாரித்த படங்களையும் வாங்கி இந்நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் அடுத்து மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி, சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணு நடித்து வரும் நேற்று இன்று நாளை, தெலுங்கில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பாஹுபலி; உட்பட பல படங்களை அடுத்தடுத்து வெளியிடவிருக்கிறது!

இந்த வரிசையில் ஐஸ்வர்யா தனுஷ், இயக்கியுள்ள வை ராஜா வை படமும் சேர்ந்துள்ளது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ்  தயாரித்திருக்கிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இம்மாதம் ஓ காதல் கண்மணி படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் அடுத்த வெளியீடாக வை ராஜா வை படத்தை வெளியிட உள்ளது.


Post your comment





Related News
அமலாபால், காஜோல், மோனல் கஜ்ஜார்... விஐபி 2 வில் தனுஷுக்கு ஸீன் இருக்குமா?
துணிக்கடை ஹீரோயின்-மோனல் கஜ்ஜார்
தனுசுடன் நடிக்க விரும்பும் டப்பிங் ஆர்டிஸ்ட்!
தெலுங்கில் ரீமேக்காகும் விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு
மோனல் கஜ்ஜார் புது முடிவு: முன்னணி நடிகர்களுக்கு துாது
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
மேனேஜரை ஏமாற்றிய மோனல் கஜ்ஜார்!
அப்பா பிரபு செம ஜாலி; மகன் விக்ரமோ, ரொம்ப \"ஷை\"... \"மார்க்\" போடும் மோனல் கஜ்ஜார்!
நெத்தியடி மோனல்!
சிகரம் தொடு படத்தால் தியேட்டர் கேண்டீன், பார்க்கிங் ஆட்கள் கூட மகிழ்ச்சி: இயக்குனர் சொல்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions