விலைபோகாத மோனிகா படம்!

Bookmark and Share

விலைபோகாத மோனிகா படம்!

இந்திரா படத்தில் இடம்பெற்ற நிலாகாய்கிறதே நிதம் தேய்கிறதே என்ற பாடலை பாடி நடித்தவர் மோனிகா. அதையடுத்தும் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்த அவர் அழகி படத்தில் கதாநாயகியாக வளர்ச்சி பெற்றார்.

பின்னர் சிலந்தி என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பரவலாக பேசப்படும் நடிகையானார். ஆனபோதும் அவரது மார்க்கெட் பெரிய அளவில் உயரவில்லை.

அதனால் சிறிய பட்ஜெட் படங்களாக நடித்து வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்துக்கு மாறி திருமணமும் செய்து கொண்டு, நடிப்புக்கு டாடா காட்டினார். இந்த நிலையில், அவர் திருமணத்துக்கு முன்பே நடித்திருந்த நதிகள் நனைவதில்லை என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

அதையடுத்து காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை இயக்கிய ஆர்.பாலுவின் இயக்கத்தில் மோனிகா நாயகியாக நடித்த இணையதளம் என்றபடம் தற்போது திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது.

புதுமுக ஹீரோவுடன் மோனிகா நடித்த அந்த படத்தில் மோனிகாவுடன் நளினி உள்பட பலர்  நடித்துள்ளனர். ஆனால் சில மாதங்களாகவே விலைக்கு வந்துள்ள அந்த படத்தை வாங்க யாருமே முன்வரவில்லை.

அதனால் தற்போது அப்படத்தை தயாரித்த பட நிறுவனமே வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளது. மேலும்,. நதிகள் நனைவதில்லை படத்தில் பாடல் காட்சியை தவிர மற்ற காட்சிகளில் ஹோம்லியாக நடித்திருந்த மோனிகா, இந்த படம் இணையதளத்தில் நடக்கும் ஆபாச சம்பவங்களை உள்ளடக்கிய கதை என்பதால் சில காட்சிகளில் அதிரடி ஆபாசத்தை வெளிப்படுத்தியும் நடித்துள்ளாராம்.

அதனால் இப்படம் வெளிவந்தால் கவர்ச்சி பிரியர்களுக்கு இப்படம் நல்ல தீனியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
மதுரை தொழிலதிபரை மணந்தார் மோனிகா என்கிற ரஹீமா.. நடிப்புக்கு முழுக்கு!
மலேசியா ரசிகர்கள் மத்தியில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மோனிகா!
மலேசிய தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை மோனிகா
40 வயதைதான்டியும் அரைநிர்வாண போஸ் கொடுத் கவர்ச்சி நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions