
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மோனிகா, அழகி படத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். அதன் பிறகு முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
சிலந்தி என்ற படத்தில் கிளாமராகவும் நடித்தார். என்றாலும் அவரால் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. இந்தநிலையில் முஸ்லிம் மதத்தை தழுவி, சாதிக் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டார். இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை.
கணவருடன் இணைந்து கார்மெண்ட் பிசினஸ் பண்ணப்போவதாக அறிவித்துவிட்டார். தற்போது அவர் கடைசியாக நடித்த நதிகள் நனைவதில்லை படம் வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது.
பலமுறை தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படத்தை 27ந் தேதி அபிராமி மூவீஸ் சார்பில் அபிராமி ராமநாதன் வெளியிடுகிறார். காமராஜ், அய்யாவழி படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி உள்ளார்.
கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், சவுந்தர்யன் இசை அமைத்துள்ளார். நாகர்கோவில் பகுதியை கதை களமாக கொண்ட காதல் கதையாக நதிகள் நனைவதில்லை உருவாகி உள்ளது.
Post your comment