சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: டி.வி. நடிகர் – நடிகைகள் ஓட்டு போட்டனர்

Bookmark and Share

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: டி.வி. நடிகர் – நடிகைகள் ஓட்டு போட்டனர்

தென்னிந்திய நடிகர் சங்கம் போல் சின்னத்திரை நடிகர் சங்கம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது. சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகை நளினியும் அவரைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதனால் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு விருகம்பாக்கம் மார்க்கெட் சாலையில் உள்ள ஏ.கே.ஆர்.மகாலில் ஓட்டுப்பதிவு தொடங்கியது. தேர்தல் அதிகாரிகளாக இயக்குனர்கள் லியாகத் அலிகான், தம்பித்துரை ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதில் 3 அணிகள் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு நடிகர்கள் பானு பிரகாஷ், ரவிவர்மா, சிவன் சீனிவாசன் ஆகிய 3 பேர் தங்களது அணிகள் சார்பில் போட்டியிடுகிறார்கள். இந்த அணிகள் சார்பில் மற்ற நிர்வாகிகள் பதவிகளுக்கும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 3 அணி சார்பில் தலா 14 பேர் போட்டியிடுகிறார்கள். பானு பிரகாஷ் தலைமையிலான அணியில் பாபூஸ், விஜய் ஆனந்த், மனோபாலா, ஓ.ஏ.கே.சுந்தர், டெல்லி கணேஷ் ஆகியோரும், ரவி வர்மா அணியில் கனகபிரியா, ஜெயந்த், வின்சென்ட் ராய், லட்சுமி பிரசன்னா, ஜெயந்த் மாதவ், லட்சுமி பிரியா ஆகியோரும், சிவன் ஸ்ரீனிவாஸ் அணியில் போஸ் வெங்கட், பரத் கல்யாண், கமலேஷ், சோனியா, பரத் ஆகியோரும் நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

டி.வி.நடிகர் – நடிகைகள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்துச் சென்றனர். ஒய்.ஜி.மகேந்திரன் நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன் டெல்லி கணேஷ், மனோபாலா, சின்னஜெயந்த், டி.பி.கஜேந்திரன், அஜய்ரத்னம், நடிகைகள் சாதனா, சங்கீத பாலன், ஆகியோர் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 1360 வாக்காளர்களில் காலை 10.30 மணி நிலவரப்படி 160 வாக்குகள் பதிவானது.

ஓட்டுப்பதிவையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions