இயக்குவதை மறந்த வெற்றிப்பட இயக்குநர்!

Bookmark and Share

இயக்குவதை மறந்த வெற்றிப்பட இயக்குநர்!

கலைஞன் வியாபாரியாக மாறும்போது கலைஞன் காணாமல் போய்விடுகிறான் என்று சொல்வார்கள். அது இன்றைய இயக்குநர்கள் பலருக்கும் பொருந்தும். ஒரு படத்தில் வெற்றி கிடைத்ததும் உடனே அடுத்தப்படத்தில் தானே தயாரிப்பாளராகி பணத்தை அள்ள ஆசைப்படுகிறார்கள்.

இந்த பட்டியலில் மூடர்கூடம் பட இயக்குநர் நவீனும் சேர்ந்துவிட்டார். 2013 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது பாராட்டுக்களை மட்டுமல்ல வசூலையும் அள்ளிக்குவித்த படம் மூடர்கூடம்.

ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் இப்படத்தை தானே தயாரித்து இயக்கினார் புதுமுக இயக்குநரான எஸ்.நவீன். தன் உறவினர்களிடம் பணம் கடன் வாங்கி, சென்ட்ராயன், ராஜாஜி, குபேரன் என அதிகம் பிரபலமடையாத நடிகர்களை வைத்து தானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மூடர்கூடம் படத்தை எடுத்தார்.

சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை பாண்டிராஜ் வாங்கி வெளியிட்டார். செமத்தியாய் லாபம் பார்த்தார். இப்படத்தைத் தொடர்ந்து நவீன் அடுத்த படத்தை இயக்குவார் என நினைத்தால்,, இயக்கத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு சத்தமில்லாமல் ஒரு படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார்.

அவரிடம் அசோஷியேட்டாக இருந்த தனராம் சரவணனை இயக்குநராக்கி அந்தப்படத்தை நவீன் தயாரிக்கிறார். மூடர்கூடம் ராஜாஜி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மூடர்கூடம் படத்தைப்போல் இதுவும் பிளாக் காமெடிப் படமா? கிராமத்துப் பின்னணியில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப்படம் இருக்கும் என்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions