கதை எழுதுவதற்காக குப்பை அள்ளிய இயக்குனர்

Bookmark and Share

கதை எழுதுவதற்காக குப்பை அள்ளிய இயக்குனர்

அறிமுக இயக்குனர் மூர்த்தி கண்ணன் இயக்கி உள்ள படம் சாலையோரம். ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்புராமன், செல்வம் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

ராஜ், செரீனா என்ற புதுமுகங்களுடன் பாண்டியராஜன், சிங்கம்புலி, நடித்துள்ளனர். எஸ்.சேதுராம் இசை அமைத்துள்ளார், தினேஷ் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 26ந் தேதி படம் வெளிவருகிறது.

"நாம் தினமும் சாலையில் செல்லும்போது குப்பை லாரியின் பின்னால் தொற்றிக் கொண்டு வரும் அந்த துப்புறவு தொழிலாளியை பற்றி நினைத்து பார்த்திருக்கிறோமா, அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. காதல் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க விரும்பினேன்.

இதற்காக சென்னை கண்ணம்மா பேட்டை அருகே உள்ள காந்தி நகரில் உள்ள துப்பறவு தொழிலாளிகள் காலனியை தேர்வு செய்தேன்.

அங்கு 2 ஆயிரம் துப்புறவு தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். அவர்களுடன் 3 மாதம் தங்கியிருந்தேன். நானும் லாரியில் தொங்கிக் கொண்டு சென்று குப்பை அள்ளியிருக்கிறேன். இப்படி அவர்களோடு வாழ்ந்து உணர்வோடு எழுதப்பட்ட கதைதான் இந்தப் படம்.

இதில் நடிக்க நடிகைகள் யாரும் முன்வரவில்லை. காரணம் 70 சதவிகித படப்பிடிப்பு குப்பை மேட்டில்தான் நடக்கும் என்பதால். அந்த நேரத்தில் துணிச்சலுடன் நடிக்க வந்தவர்தான் ஷெரீனா.

கொடுங்கையூர் அருகே உள்ள அத்திப்பட்டி குப்பை மேட்டில்தான் படப்படிப்பு நடந்தது. 25 நாள் படப்பிடிப்பில் ஹீரோயின் உள்பட பலருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினோம்" என்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன்.

 


Post your comment





Related News
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஆனந்த கண்ணனும் ஹீரோவாகிறார்!
\'சேட்டை\' ஆர். கண்ணன் இயக்கும் அடுத்தபடம்! \'போடா ஆண்டவனே என் பக்கம்\'
ஆர்.கண்ணன் இயக்கத்தில் போடா ஆண்டவனே என் பக்கம்
மீண்டுமொரு இரட்டை இசையமைப்பாளர்கள்!
இசையமைப்பாளர் தட்சிணா மூர்த்திக்கு பாராட்டு விழா: திரையுலகமே திரண்டு வாழ்த்து.
எனது நன்மதிப்பை கெடுத்துவிட்ட்டார் ஸ்ரீதரன் புகார் அளித்த காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி!
பழம்பெரும் நடிகர் : இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்
இயக்குனரான கண்ணனுடன் இணையும் ஜெயம்ரவி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions