ரிலீஸுக்கு தயாராகும் மோசகலக்கு மோசகாடு

Bookmark and Share

ரிலீஸுக்கு தயாராகும் மோசகலக்கு மோசகாடு

நடிகர் சுதீர் பாபு நடிப்பில், குற்றப் பின்னணியில் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக உருவாகும் மோசகலக்கு மோசகாடு என்ற தெலுங்கு படத்தை இயக்குநர் போஸ் நெல்லுரி இயக்கி வருகின்றார்.

தெலுங்கு திரையில்  சுவாமி ர ர என்ற வெற்றிப் படத்தை இயக்கிய சக்ரி சிகுர்பத்தி, லக்ஷ்மி நாரசிம்ஹா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில்  இப்படத்தை தயாரித்து வருகின்றார்.

திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பை நடத்திய படக்குழு தற்போது இப்படத்தின் இறுத்திக் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர். அபிமன்யு , துவுவாசி மோஹாந், பிரவீன், ஜெயப்பிரகாஷ் ரெட்டி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர்  மணிகாந்த் கத்ரி இசையமைத்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு கெளவ் பாய் பாணியில் நடிகர் கிருஷ்ணா நடித்த  மோசகலக்கு மோசகாடு படத்தின் தலைப்பை மட்டுமே இப்புதிய படத்தில் உபயோகப்படுத்தி இருப்பதாகவும் இப்படத்தின் கதை பழைய படத்தின் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும் இயக்குநர் போஸ் நெல்லுரி கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions