தணிக்கையில் யு/ஏ பெற்ற மோசகலக்கு மோசகடு

Bookmark and Share

தணிக்கையில் யு/ஏ பெற்ற மோசகலக்கு மோசகடு

தெலுங்கு திரையின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவரும், வளர்ந்து வரும் நடிகருமான சுதீர் பாபு நடித்துள்ள மோசகலக்கு மோசகடு படம் மே மாதம் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட அப்படம் யு/ஏ  சான்றிதழ் பெற்று வந்துள்ளது. இதனால் இப்படம் அறிவிக்கப்பட்டபடி மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிகின்றது. இப்படத்தில் சுதீருக்கு ஜோடியாக நடிகை நந்தினி நடித்துள்ளார்.

இவர்களுடன் அபிமன்யா சிங், ஜெய பிரகாஷ் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் போஸ் நெல்லூரி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதால் படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படம் குற்ற பின்னணியைச் சேர்ந்த திகில் படம் ஆகும். டோலிவுடில் வெற்றி பெற்ற சுவாமி ராரா படத்தின் இரண்டாம் பாகம் தான் இப்படம் என்றும் கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions