பின்னணி பாடகரான நான்கடவுள் ராஜேந்திரன்!

Bookmark and Share

பின்னணி பாடகரான நான்கடவுள் ராஜேந்திரன்!

டார்லிங், இவனுக்கு தண்ணியில கண்டம் படங்களின் ஹிட் நான் கடவுள் ராஜேந்திரனின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. அதுவரை வேறு காமெடியன்களிடம் கால்சீட் கேட்டவர்கள்கூட இப்போது இவர் ஒரு மூன்று நாள் கால்சீட் கொடுத்தால்கூட போதும் என்று அவரை முற்றுகையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ஒரு நாள்கூட ஓய்வில்லாத படப்பிடிப்பில் அவர் இருந்து வருகிறார். அதோடு, பகலில் நடித்து விட்டு வந்தால் இரவில் அதற்கு முன்பே நடித்துக்கொடுத்த படங்களின் டப்பிங்கில் இருக்கிறார்.  

இப்படி நடிப்பில் பிசியாக இருக்கும் ராஜேந்திரனை இப்போது, இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே -என்றொரு படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வைத்துள்ளனர்.

அதோடு, ஒரு பாடலில் அவரை நடனமாட வைத்திருப்பவர்கள், அவருக்கு அவரையே பின்னணியும் பாட வைத்து பெரும் சாதனை புரிந்துள்ளனர்.

அதோடு, அதே பாடலில் அவர் மட்டுமின்றி, கானா பாலா, பாடகர் வேல்முருகன் ஆகியோரும் இணைந்து பின்னணி பாடியிருப்பதோடு, நான் கடவுள் ராஜேந்திரனுடன் இணைந்து நடனமும் ஆடியிருக்கிறார்களாம். இந்த பாடலைத்தான் அப்படத்தின் ப்ரமோஷனுக்கு பயன்படுத்துகிறார்களாம்.

 


Post your comment





Related News
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
தமிழ்நாட்டில் இதுவரை வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய டாப் 5 படங்கள்
அதிக கிளாமர்- பிரபல நாயகி மீது கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
சமூக வலைத்தளங்களில் கிண்டல், ஆனால், வசூல் இத்தனை கோடியா- லாரன்ஸ் வேற லெவல்
எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி
ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டாரா?
மொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions