கல்யாண் ராம் படட்தின் ரீமேக் தான் “மொட்ட சிவா கெட்ட சிவா“

Bookmark and Share

கல்யாண் ராம் படட்தின் ரீமேக் தான் “மொட்ட சிவா கெட்ட சிவா“

பல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “மொட்ட சிவா கெட்ட சிவா“ என்று பெயரிட்டுள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது.

உலகம்  முழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.                                                                                       
தெலுங்கில் கல்யாண் ராம் நடித்து சூப்பர் ஹிட்டான “ பட்டாஸ் “ படத்தின் ரீமேக் இது.  ராகவா லாரன்ஸ் நடிக்க வேந்தர் மூவீஸ் தயாரிக்க இருந்த “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் தலைப்பு “ பட்டாஸ் “ படத்தின் ரீமேக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் இயக்குனர் சாய்ரமணி கேட்டுக் கொண்டனர்.

வேந்தர் மூவீஸ் மதன் அவர்கள் இந்த தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு தலைப்பை வைக்க உள்ளார்.

முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். மற்றும் நாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் சதீஷ் , தம்பிராமய்யா, மனோபாலா, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரைக்கதை அமைத்து இயக்குகிறார் -  சாய்ரமணி . இவர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கியவர்.படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் தேதி சென்னையில் துவங்கி முப்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் படப்பிடிப்பு ஹைதராபாத், ஹாங்காங்,சுவிட்சர்லாந்து போன்ற இடங்களில் அதிக பொருட்செலவில் படமாக்கப் பட உள்ளது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions