தம்பிராமையாவுடன் போட்டி போட்டு பாடி, ஆடிய மொட்டை ராஜேந்திரன்

Bookmark and Share

தம்பிராமையாவுடன் போட்டி போட்டு பாடி, ஆடிய மொட்டை ராஜேந்திரன்

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களும் தற்போது பாடகர்களாகவும் உருமாறி வருகின்றனர். சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் பாடகர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் களமிறங்கியிருக்கிறார்கள். 

இயக்குனர் சரணிடம் இணை இயக்குனராக பணியாற்றி, தெலுங்கில் சில படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக தமிழில் இயக்கும் புதிய படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’.  ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா, ஜான் விஜய், ‘பிளாக்’ பாண்டி ஆகியோரும் நடிக்கின்றனர். 

இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலை தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடியதோடு மட்டுமில்லாமல், இப்படத்தில் அந்த பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளனர்.

போட்டி பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை கவிஞர் விவேகா எழுத, மரிய ஜெரால்டு என்பவர் இசையமைத்திருக்கிறார். மாஸ்டர் அசோக்ராஜா நடனம் அமைத்திருக்கிறார். இப்பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
குடிக்கு அடிமையான மொட்டை ராஜேந்திரன்.!
காக்க முட்டை மணிகண்டனின் கடைசி விவசாயி கைவிடப்பட்டதா ?
பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions