எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி

Bookmark and Share

எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி

நடிகர் லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. பல உதவிகளை இவர் செய்துள்ளார். இதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இன்று இவர் நடிப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரைக்கு வந்தது, இப்படத்தில் இவர் பெயருடன் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் கார்டில் வந்தது.

இதனால், ரஜினி ரசிகர்கள் அனைவரும் கோபமாகியுள்ளனர், பலரும் இதை எதிர்த்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது லாரன்ஸ் கூறுகையில் ‘மக்கள் சூப்பர்ஸ்டார் வேண்டாம். அந்த பட்டம் படத்தில் சேர்க்கப்பட்டது எனக்கு தெரியாது. இயக்குனர் தான் அதை இறுதியில் சேர்த்துள்ளார்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், கண்மணி ராகவா லாரன்ஸ் என்றே அழைத்தால் போதும், என் தாய் பெயர் அது என்பதால், அதை இணைக்கவிருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions