ராகவா லாரன்ஸுக்கு மீண்டும் ஒரு பிரச்சனை

Bookmark and Share

ராகவா லாரன்ஸுக்கு மீண்டும் ஒரு பிரச்சனை

தமிழக மக்கள் அரங்கேற்றும் அனைத்து போராட்டங்களிலும் ராகவா லாரன்ஸ் தவறாமல் முதல் ஆளாக கலந்துகொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி தற்போது நடந்து வரும் ஹைட்ரொகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வரை அனைத்திற்கும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுஒருபுறமிருக்க, அவரது படங்கள் வெளியாவதில் தான் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா சென்ற மாதமே வெளியாவதாக இருந்து மார்ச் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

வேந்தர் மூவிஸ் மதன் இந்த படத்தை வாங்கியிருந்த நிலையில், அவர் சிறை சென்றுவிட்டார். பின்னர் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கி வெளியிட முயற்சி செய்து வருகிறது. ஆனால் பண பிரச்சனை காரணமாக தொடர்ந்து தள்ளிபோய் வருகிறது.

பைனான்சியர் போத்ரா இன்று செய்தியாளர்களை சந்தித்து "இந்த நேரம் வரை நீதிமன்ற தடை விலக்கப்படவோ ரத்து செய்யப்பட வோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் தவறாக செய்திகள் பரப்பப் படுகின்றன," என கூறியுள்ளார்.

மார்ச் 10ம் தேதியாவது வெளிவருமா என விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. இப்படி மாற்றி மாற்றி அறிவிப்பதால் மொட்ட சிவாவுக்கு தியேட்டர் குறைந்த அளவே கிடைக்கும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions