பிரபல சின்னத்திரை நாயகி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்.!

Bookmark and Share

பிரபல சின்னத்திரை நாயகி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்.!

பல்வேறு பிரச்சனைகளால் திரையுலக பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட ஹிந்தி சீரியல் இணை தயாரிப்பாளர் ஒருவர் பண பிரச்சனையால் அடுக்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகையான மௌமிதா சஹா என்பவர் கொல்கத்தாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் இவரது உடலை மீட்டெடுத்து உள்ளனர்.

மேலும் இவர் மன உளைச்சலால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். போலீசார் இதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions