தியேட்டர்களில் கபாலி படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Bookmark and Share

தியேட்டர்களில் கபாலி படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்துக்கான முன்பதிவிலும் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசு அனுமதித்து உள்ள காட்சிகளை விட அதிக காட்சிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். 

தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான ஆவணங்களையும் அவர் புகார் மனுவுடன் இணைத்திருந்தார்.


Post your comment





Related News
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
மெர்சலை நிராகரித்த பிரபல திரையரங்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
இனி எங்க தியேட்டரில் கோலா பானங்கள் கிடையாது- பிரபல திரையரங்கம் அதிரடி
தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவை இல்லை
அனிருத்திற்கு காசி தியேட்டரில் பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!
விரைவில் தியேட்டர்ல 4 பேர்..!
நீண்ட நாட்களாக தள்ளி போகும் சேரன் இயக்கிய படம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions