சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

Bookmark and Share

சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதை கண்காணிக்க உயர்-அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை நகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திரைப்படத்தை திரையரங்கில் திரையிட தமிழக அரசு அனுமதி கட்டணம் நிர்ணயித்துள்ளது.

திரையரங்குகளில் திரைப்படம் திரையிடும்போது அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக டிக்கெட் விற்பனை செய்தால் அது தமிழ்நாடு திரைப்பட ஒழுங்குமுறை விதிகள், 1957-ன்படி குற்றமாகும்.

இதனை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசு உள்துறை (திரைப்படம்) 1-4-2016 தேதியிட்ட உத்தரவின்படியும், பொதுமக்களின் புகார்களை விசாரித்து திரையரங்கு உரிமையாளர்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இத்தனிப்படையில் போலீஸ் உதவி கமிஷனர், வணிகவரித்துறை அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒரு வருவாய்துறை அலுவலர் இடம் பெற்றுள்ளனர்.

எனவே திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த அனுமதி கட்டணத்தை காட்டிலும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் பொதுமக்கள் உடனே காவல்துறை தொலைபேசி 044-23452359 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Post your comment

Related News
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்
பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! - சத்யா மூவீஸ்
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions