பெயர் மாற்றுவதில் சாதனை படைக்கும் '555' நாயகி..!

Bookmark and Share

பெயர் மாற்றுவதில் சாதனை படைக்கும் '555' நாயகி..!

சசி இயக்கத்தில் வெளியான '555' படத்தில் பரத்தின் ஜோடியாக அறிமுகமாகி அந்தப்படத்தில், சிலேட்டு குச்சியை தின்னும் வினோத பழக்கத்தால் நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் மிருத்திகா.. தமிழுக்குத்தான் இவர் மிருத்திகா.. அடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தபோது ரெஹானா என மாற்றிக்கொண்டார்.. ஆனால் இவரது ஒரிஜினல் பெயரோ சாந்தினி.. இப்படி பெயர் மாற்றும் விஷயத்தில் பூர்ணா, தாமிரபரணி பானு, நந்தகி ஆகிய நடிகைகளை எல்லாம் ஓவர்டேக் செய்துவிட்டார் இந்த ரெஹானா.

பெயரை மாற்றிய நேரமோ என்னவோ, தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. படத்தின் பெயர் கே.எல்-100 (KL 10).  இதில் மலப்புரம் ஏரியாவை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறார் ரெஹானா.

கதையின் பின்னணில் கால்பந்து விளையாட்டு கூடவே வரும்.. அதை மையப்படுத்தி இவர்கள் இருவரின் நட்பும், அதனூடே உருவாகும் மெல்லிய காதலும் சொல்லப்பட்டு இருக்கிறதாம்.

முக்கியமான விஷயம், சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய நடிகர் டாம் சாக்கோ இந்தப்படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது சர்ச்சைகளின் காரணமாக படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டாராம்...  


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions