நாயகர்கள் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

Bookmark and Share

நாயகர்கள் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

அதர்வா-கேத்தரின் தெரசா ஜோடியாக நடித்துள்ள படம் கணிதன். டி.என்.சந்தோஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இதில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் விழாவில் பேசியதாவது:- 

நான் இயக்கிய துப்பாக்கி படத்தை எஸ்.தாணு தயாரித்தார். அந்த படம் வெளியானபோது நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன.

அதன்பிறகு கத்தி படத்தை இயக்கினேன். ஒரு கத்தியைத்தான் எடுத்தேன்.

ஆனால் அந்த படத்துக்கு எதிராக நூறு கத்திகள் வந்தன. சென்னையில் அந்த படத்தை திரையிட்ட ஒரு தியேட்டரில் குண்டு வெடித்தது. 

இதனால் கத்தி படம் வருமா? வராதா? என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது எஸ்.தாணு உதவினார். தற்போது என்னிடம் பணியாற்றிய சந்தோஷை கணிதன் படம் மூலம் டைரக்டராக்கி இருக்கிறார்.

துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய எல்லோரும் டைரக்டர்கள் ஆகிவிட்டனர். அதர்வா புதுமுக டைரக்டர்கள் படங்களில் நடிக்கிறார். 

கதாநாயகர்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் வருவது, காலை 9 மணிக்கே படப்பிடிப்புக்கு வருவதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. நல்ல கதைகளை கண்டு பிடித்து நடிக்க வேண்டும். அதர்வா சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

எனக்கு தெரிந்த வரை விஜய், அஜித்குமார் இருவரும்தான் அதிகமான புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்துள்ளனர். கதாநாயகர்கள் நிறைய புது டைரக்டர்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

5 படங்களில் அவர்கள் நடித்தால் அவற்றில் 3 படங்களை புதுமுக டைரக்டர்களுக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார். 

விழாவில் டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அட்லி, தயாரிப்பாளர் எஸ்.தாணு, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?
அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!
சிம்புவை இயக்கும் முருகதாஸ்?
முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions