அந்தக் கொடுமையை நான் செய்யமாட்டேன் : எம்.எஸ்.பாஸ்கர்

Bookmark and Share

அந்தக் கொடுமையை நான் செய்யமாட்டேன் : எம்.எஸ்.பாஸ்கர்

இன்று வருகிற சினிமாவில் நகைச்சுவை என்பது பகைச்சுவையாக மாறி வருகிறது. அடுத்தவர்களை கிண்டல் செய்வதும் இரட்டை அர்த்த வசனம் பேசுவதும்தான் காமெடி என்று இருக்கிறதே,  என்று நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்டால் மனிதர் ஆவேசமாகப் பொரிந்து தள்ளுகிறார். 

"காமெடிக்கு ஒரு காலத்தில் எவ்வளவு மரியாதை இருந்தது. கலைவாணர் நகைச்சுவை நடிகர்தான் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடிய நாடு நம் நாடு. அப்போது மக்கள் அவ்வளவு மரியாதை கொடுத்தார்கள். காரணம் அப்போது நகைச்சுவையில் நல்ல கருத்தையும் சொன்னார்கள். இப்போது நகைச்சுவை அப்படியா இருக்கிறது? 
அடுத்தவரை கேலி பேசுவதும், அவமானப்படுத்துவதும், உடல் குறையைப் பேசி கிண்டல் செய்வதும், மூத்தவர்களை கிண்டல் செய்வதும், தந்தையை, ஆசிரியர்களை கேலி பேசுவதும்,  பெண்களைக் கேலி செய்வதும், மரியாதைக்குரியவர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்வதும்தான் காமெடியாக இருக்கிறது. யார் இதை ரசிக்கிறார்கள் என்று  இப்படி எடுக்கிறார்கள்? இதுமாதிரி காட்சிகளைப் பார்க்கும் போது எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும் ஏன் தான் இப்படி எல்லாம் எழுதி காட்சி வைக்கிறார்கள். இப்படி இருந்தால் யார் காமெடியன்களை மதிப்பார்கள்?

இதை யார் ரசிக்கிறார்கள்.? நான் இப்படிப்பட்ட மட்டமான காட்சிகளில் எல்லாம் நடிப்பதில்லை. இரட்டை அர்த்த வசனம் பேசி நடிப்பதில்லை. பெண்களைக் கேலி பேசமாட்டேன். அந்தக் கொடுமையை எல்லாம் நான்செய்யமாட்டேன் என்றவர் தன்னை ஒரு நகைச்சுவை நடிகன் என்று குறுக்கி விடவேண்டாம் தான் ஒரு குணச்சித்திர நடிகரும் கூட என்று பின் குறிப்பாகக் கூறினார்.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions