கமலின் பக்தரான எம்.எஸ்.பாஸ்கர்!

Bookmark and Share

கமலின் பக்தரான எம்.எஸ்.பாஸ்கர்!

சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்து நடிகரானவர் எம்.எஸ்.பாஸ்கர். அதனால் அவர் தமிழகத்தின் பல ஏரியாவினர் பேசும் தமிழை அழகாக பேசக்கூடியவர். அந்த வகையில், அழகம்பெருமாள் இயக்கிய டும் டும் டும் படத்தில் திருநெல்வேலிக்காரராக அந்த ஏரியா தமிழ் பேசி நடித்திருந்தார்.

அதனால் நெல்லை தமிழில் படமெடுக்கும் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் எம்.எஸ்.பாஸ்கராக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது கமல் நடித்துள்ள பாபநாசம் படமும் நெல்லை தமிழில் உருவாகியிருப்பதால் இந்த படத்திலும் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

முக்கியமாக, இவர் நெல்லை தமிழை நன்றாக பேசுவார் என்கிற விசயம் கமலுக்கு தெரியும் என்பதால் அவரே சிபாரிசு செய்து பாபநாசம் படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை நடிக்க வைத்துள்ளார்.

ஏற்கனவே தான் கதை எழுதி நடித்த உத்தமவில்லன் படத்திலும் பாஸ்கருக்கு ஒரு வேடம் கொடுத்த கமல், இப்போது பாபநாசம் படத்திலும் தன்னை நடிக்க வைத்திருப்பதால், இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று சொல்லி உருகிப்போகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

அதோடு நில்லாமல், கமலை என் கடவுள் என்கிறார். அவர் என் நடிப்பு மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். நான் அவர் மீது அளவு கடந்த பக்தி வைத்திருக்கிறேன் என்று கமல் முன்னிலையிலேயே பேசுகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

ஆனால், அவர் பேசுவதைக்கேட்டு சிரித்துக்கொள்ளும் கமல், நானோ கடவுளே இல்லை என்கிறேன். ஆனால் இவரோ என்னையே கடவுள் என்கிறார். இவரை என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை என்கிறார் சிரித்தபடி.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions