சீரியல் தயாரிப்பு பற்றி தயாராகும் சினிமா

Bookmark and Share

சீரியல் தயாரிப்பு பற்றி தயாராகும் சினிமா

ஒரு திரைப்படம் தயாரிப்பது பற்றியும், திரைப்பட தயாரிப்பாளர்கள் பற்றியும், சினிமாவில் நடிக்க வருகிறவர்களின் போராட்டம் பற்றியும் நிறைய சினிமாக்கள் வந்திருக்கிறது.

முதன் முறையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பற்றி சவாலே சமாளி என்ற ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அசோக் செல்வன், பிந்து மாதவி, ஜெகன், ஊர்வசி, கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், பிரீத்திதாஸ், பரவை முனியம்மாக நடிக்கிறார்கள்.

தமன் இசை அமைக்கிறார், சத்யசிவா இயக்குகிறார்.  ஒரு சீரியல் இயக்கும் ஆசையுடன் சென்னை வரும் ஹீரோ இங்கு சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. ஒரு சீரியல் எப்படி தயாரிக்கப்படுகிறது.

"இவருக்கு பதில் இவர் நடிப்பார்" என்கிற டைட்டில் எப்படி வந்து சேர்கிறது. சேனல்களுக்குள் நடக்கும் பனிப்போர். டிஆர்பி ரேட்டிங்கை பிடிக்க நடக்கும் திகிடுதத்தங்கள், நடிகர் நடிகைகள் தேர்வு, கதையில் இடைசெருகல், இயக்குனர் திடீர் மாற்றம் என சீரியல்களில் நடக்கும் கூத்துக்களை அப்படியே காமெடியாக தருகிறார்கள்.

அசோக் செல்வன் இயக்குனராகவும், ஜெகன் நடிகராகவும், பிந்து மாதவி தொகுப்பாளராகவும் நடிக்கிறார்கள். சின்னத்திரையை மையப்படுத்தி வெளிவரும் முதல் காமெடி படம் இது.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions