காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்க்கு வந்த சிக்கல்! வைரலாகும் தகவல்

Bookmark and Share

காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்க்கு வந்த சிக்கல்! வைரலாகும் தகவல்

ரஜினி, கமல், அஜித், விஜய் என பல நடிகர்களோடு நடித்தவர் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 1987 இல் வந்த திருமதி ஒரு வெகுமதி படத்தில் ஆரம்பித்து கடவுள் இருக்கான் குமாரு படம் வரை நடித்துள்ளார்.

நேற்று அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கபட்டார்.
இதில் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும், அவரது நினைவு நாளை விவசாயிகள் நாளாக கொண்டாடவேண்டும், மேலும் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது

இதற்கு அதிமுக கட்சி முட்டாள்கள் நிறைந்த கட்சி என்றும், இறந்த ஒருவருக்கு எப்படி நோபல் பரிசு கொடுக்க முடியும் என்றும், ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

குற்ற வழக்கு, சிறை சென்றவருக்கு எப்படி பாரத ரத்னா விருது கொடுப்பது என எம்.எஸ்.பாஸ்கர் சொன்னதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் வைரலானது.

தற்போது அவர் இதை மறுத்துள்ளார். நான் இந்த பதிவை போடவில்லை. எனக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது. என்னுடைய நண்பர்களான சிங்கமுத்து, ஆனந்த் ராஜ் ஆகியோர் அந்த கட்சியில் உள்ளனர்.

நான் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


Post your comment

Related News
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions