எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா சிறப்பு தபால்தலை: ஐ.நா.சபை வெளியிட்டது

Bookmark and Share

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா சிறப்பு தபால்தலை: ஐ.நா.சபை வெளியிட்டது

தமிழகத்தை சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி, எம்.எஸ்.சுப்புலட்சுமி  இசைத் துறையில், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அவரது இசை சாதனையை பாராட்டி நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதினை வழங்கி, மத்திய அரசு அவரை கவுரவித்தது.

உலகெங்கும் பல நாடுகளில், இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள சுப்புலட்சுமி, 1966-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் தனது இசைக் கச்சேரியை அரங்கேற்றினார். இதன் மூலம், ஐ.நா.சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமை பெற்றார். 

கடந்த 2004-ம் ஆண்டு மறைந்த சுப்புலட்சுமியை கவுரவிக்கும் வகையில், அவரின் நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டது. 
இந்நிலையில், உலக மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட எம்.எஸ். சுப்புலட்சுமியை கவுரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய சுதந்திர நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், சுப்புலட்சுமிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். 

சுப்புலட்சுமியின் இசைப்பயணத்தை விளக்கும் புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது. அதுமட்டுமின்றி, சுப்புலட்சுமியின் நினைவாக, ஐ.நா., சார்பில், சிறப்பு தபால் தலையும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் தபால்துறை சார்பில் நேற்று இந்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சிறப்பு தபால் தலை வெளியிடும் விழாவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்துறை பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இவ்விழா மேடையில் பிரபல கர்நாடகப் பாடகி சுதா ரகுநாதன் எம்.எஸ். சுப்புலட்சுமியின் மிகப்பிரபலமான பாடல்களை பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினார். 

வங்காளம் உள்ளிட்ட ஏழுமொழிகளில் சுதா ரகுநாதன் நடத்திய இந்த இசைக் கச்சேரிக்கு பின்னர் அவரது இசை சேவையை கவுரவிக்கும் வகையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டுவிழா நினைவு சிறப்பு தபால்தலையின் முதல்பிரதி சுதா ரகுநாதனுக்கு வழங்கப்பட்டது.

1.20 டாலர் விலைகொண்ட இந்த சிறப்பு தபால்தலையில் ஐக்கிய நாடுகள் சபையின் சின்னத்துடன் எம்.எஸ். சுப்புலட்சுமியின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions