எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்

Bookmark and Share

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்

மறைந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு அஞ்சலி கூட்டம், தமிழ்நாடு இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்தது. 

இதற்கு முன்னிலை வகித்த இசை அமைப்பாளர் இளையராஜா, மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:– 

இந்த சங்கம் உருவாக முக்கிய காரணமே எம்.எஸ். விஸ்வநாதன்தான். அந்த காலத்தில் பாடல்களை மொத்தமாக வாசித்து முடித்து விட்டு, படம் வெளியாகி பல நாட்களுக்கு பிறகே இசை கலைஞர்களுக்கு சம்பளம் கிடைக்கும். அதிலும் சிலர் தங்களுடைய கமிஷனை எடுத்துக்கொண்டு கொடுப்பார்கள். 

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் முழு சம்பளம் கிடைக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் சாப்பிட மறந்து உழைப்பார். கவிஞர்களை ஊக்குவிப்பதில் அவர் முதல் ஆளாக இருந்தார். 'கவிஞர் கண்ணதாசனும், பாபநாசம் சிவனும் எனக்கு இரண்டு கண்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனது நெற்றிக்கண்ணை போன்றவர்' என்று எம்.எஸ்.விஸ்வ நாதன் கூறுவார். 

அவருடைய இசை என்னைப் போன்றவர்களுக்கும் வந்து சேர்ந்தது. சிறந்த இசை அமைப்பாளராக இருந்து அனைவரையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இசைமேதை எம்.எஸ்.வி.க்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தால் அதை நானே செய்து விடுவேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து விட்டனர். அவருக்கு சென்னையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய இசை நமக்கு ஊக்க மருந்தாக இருக்கும். 

இவ்வாறு இளையராஜா பேசினார். 

கூட்டத்தில் பேசிய கங்கைஅமரன், "எம்.எஸ்.விஸ்வநாதன் சிலையை சென்னையில் வைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது. அதை நானே முன் நின்று செய்வேன்" என்றார். 

கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். கவிஞர் முத்துலிங்கம், பெப்சி தலைவர் சிவா, இசை அமைப்பாளர்கள் இமான், ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், எஸ்.எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், ஷைந்தவி, பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், வாணி ஜெயராம், ஹரிகரண், உன்னிகிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions