எம்.எஸ்.வி. இறுதி ஊர்வலம் துவங்கியது

Bookmark and Share

எம்.எஸ்.வி. இறுதி ஊர்வலம் துவங்கியது

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இறுதி ஊர்வலம், அவரின் இசையில் உருவான "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" என்ற பாடலுடன் துவங்கியுள்ளது.

இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.எஸ்.விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று அதிகாலை காலமானார். அவரின் உடலுக்கு, திரைத்துறையினர் மட்டுமல்லாது, பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவரின் இறுதிச்சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது. அவரின் இறுதி ஊர்வலத்தில் பி.வாசு, வைகோ, நடிகை சச்சு, நடிகர் மோகன் உள்ளிட்ட திரையுலகினரும் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், எம்.எஸ்.வி.யின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர். எம்.எஸ்.வின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடல் தாங்கிய வண்டிக்கு முன், இசைக்குழுவினர், அவரது பாடல்களை பாடியபடி சென்றனர்.

இறுதி ஊர்வலம் செல்லும் வழியில், தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் எழுதப்பட்டிருந்த வாசகம் இது.. தமிழ் திரையிசை உலகில் சரித்திரம் படைத்த எங்களின் மெல்லிசை மாமன்னரே சுவாசக்காற்று உன்னை விட்டுப்பிரிந்தாலும் உன் ஸ்வரக்காற்று இம்மண்ணை விட்டுப்பிரியாது.

பூலோகம் உள்ளவரை உன் பூபாளம் பாடிக்கொண்டேயிருக்கும் உன் மெட்டில் வாழும் இசை சமுதாயத்தின் இசை அஞ்சலி...... என்று அதில் எழுதப்பட்டிருந்தது. எம்.எஸ்.வி.யின் மறைவு. அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.


Post your comment





Related News
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்எஸ்விக்கு ஆதரவு தராதவர்கள் - ஸ்ரீப்ரியா ஆவேசம்
தென்னிந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு எம்எஸ்வி - சரத்குமார்
எம்.எஸ்.விஸ்நாதன் பற்றி பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கள்
எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து
எம்.எஸ்.வி. ஓர் அபூர்வ மனிதர் - ரஜினிகாந்த்!
எம்.எஸ். வி. மறையவில்லை : சங்கர் கணேஷ்
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
எம்.எஸ்.வி.யின் தனி ராஜ்யம்
எம்.எஸ்.வி., கடந்து வந்த பாதை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions