எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு

Bookmark and Share

எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்நாதன் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு சினிமா பிரமுகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். 

திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த இளையராஜா, எம்.எஸ்.வியின் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக சென்னை திரும்பி வந்து நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து இசையமைப்பாளர் இளையராஜா கண்கலங்கினார். 

எம்.எஸ்.வி.யின் உடல் அருகிலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தார். இளையராஜாவின் விழிகளில் கண்ணீர் நிரம்பி இருந்தது. இளையராஜாவின் மகள் பவதாரணி, மகன் கார்த்திக் ராஜா போன்றோரும் அவருடன் உட்கார்ந்து இருந்தனர். அருகில் இருந்தவர்கள் இளையராஜாவை இதற்கு முன் இப்படி பார்த்ததே இல்லை என்றனர். 

பின்னர் இளையராஜா பேசும்போது, இசையுலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் என் வழிகாட்டி. பாமரன் உணர்வுகளையும் இசையால் தட்டி எழுப்பினார். திராவிட இயக்கங்கள் வளர்வதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் உதவியாக இருந்தார். ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல் திராவிட கட்சிகள் வேரூன்றி வளர உதவின. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலை எழுதி இருந்தார் என்று கூறினார். 

காமெடி நடிகர் வடிவேலுவும் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்கலங்கினார். அவர் கூறும்போது, நான் எம்.ஜி.ஆர் ரசிகன். சிறுவயதில் இருந்தே எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களை கேட்டுத்தான் வளர்ந்தேன். என்னுடைய பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களை பாடி இருக்கிறேன். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஆகிய இருவரின் படங்களுக்கு இசையமைத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர் என்றார். 

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக்கில் எம்.எஸ்.வியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:– 

எம்.எஸ்.விஸ்வநாதன் எனது ஆசான். எனது தந்தை அவர் இப்போது மறைந்து விட்டார். அவருக்கு நடந்து கொண்டிருக்கும் இறுதி அஞ்சலியில்கூட கலந்துகொள்ள முடியாத நிலை எனக்கு வரவேண்டுமா? அந்த அளவுக்கு சிறிய நல்லதைகூட நான் எனது வாழ்நாளில் செய்ய தவறிவிட்டேனா என்ன? இந்த நேரத்தில்தானா அமெரிக்காவில் இருக்க வேண்டும். 

நானும் இந்திய சினிமாவும் அனாதையாக நிற்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். கண்ணதாசனும் வாலியும் எழுதி வைத்த பாடல் வரிகளுக்கு மேல் இருந்து அவர் இசையமைக்க இருக்கும் தெய்வீக இசையை கேட்க முடியுமா? ‘ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ’. வானில் முழு நிலவாக அவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ
எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து
ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
எம்.எஸ்.வி.யின் தனி ராஜ்யம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions