எம்எஸ்விக்கு ஆதரவு தராதவர்கள் - ஸ்ரீப்ரியா ஆவேசம்

Bookmark and Share

எம்எஸ்விக்கு ஆதரவு தராதவர்கள் - ஸ்ரீப்ரியா ஆவேசம்

மறைந்த மெல்லிசை மன்னர் எம்எஸ்விக்கு பத்ம விருதுகள் உட்பட மத்திய அரசின் முக்கிய விருதுகள் வழங்கப்படாதது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ஆவேசமான கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் எம்எஸ்விக்கு இதுவரை எந்த ஒரு பத்ம விருதுகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த யாருமே அதற்குண்டான முயற்சிகளை எடுக்காதது ஆச்சரியமே.

நேற்று ஸ்ரீப்ரியா அவருடைய டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது, “என்னுடைய அபிமான இசைமைப்பாளர் எம்எஸ்வி இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவருடைய பல பாடல்களுக்கு நான் வாயசைத்துள்ளேன். என்னுடைய பல படங்களுக்கு அவர் தயாரிப்பாளராக இருந்துள்ளார். உங்களுக்கு என்னுடைய அஞ்சலி ஐயா. என்னிடம் சில கேள்விகள் உள்ளன.

எத்தனையோ தென்னிந்திய இசையமைப்பாளர்களுக்கு என்றாவது ஒரு நாள் எம்எஸ்வி போல ஆக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். ஆனால் ஏன் ஒருவர் கூட அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்ட போது, எங்களுக்காக ஒரு பாதை அமைத்துக் கொடுத்த எம்எஸ்விக்கு வழங்காத வரை நாங்கள் அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

அவர்கள் மேஸ்ட்ரோவாக இருக்கலாம், ஜீனியஸ் ஆக இருக்கலாம், அவர்கள் மிகப் பெரும் தகுதியுடையவர்களாக இருக்கலாம். ஆனால், ஏன் அவர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கவில்லை?

வந்தவர் போவது இயற்கை, அதற்காக என் கண்கள் கலங்கவில்லை. இந்த தேசம் உம்மை கௌரவிக்கவில்லையே என்று என் மனம் ஒப்பாரி வைத்து புலம்புகிறது,” என ஆதங்கப்பட்டு தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions