மீண்டும் படம் இயக்குகிறார் மு.களஞ்சியம்!

Bookmark and Share

மீண்டும் படம் இயக்குகிறார் மு.களஞ்சியம்!

முரளி நடித்த பூமணி படத்தை இயக்கியவர் மு.களஞ்சியம். அதையடுத்து கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் பின்னர் ஒரு பத்து ஆண்டுகளாக காணாமல் போனவர் மீண்டும் கருங்காலி என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

அந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். அப்படத்தில் அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்தும் அதே அஞ்சலியை நாயகியாக வைத்து, ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை தொடங்கினார் களஞ்சியம்.

அப்படத்தில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டு 12 நாட்கள் நடித்த நிலையில், அஞ்சலிக்கும் அவரது சித்திக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு, சென்னையை காலி பண்ணிவிட்டு ஆந்திராவுக்கு சென்றார் அஞ்சலி.

அதோடு, தங்கள் குடும்ப பிரச்சினைக்கு களஞ்சியமும் காரணம் என்று சொல்லிக்கொண்டு அவரது ஊர் சுற்றி புராணம் படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் கூறினார் அஞ்சலி. அதையடுத்து சினிமா சங்கங்களுக்கு கடிதம் கொடுத்து அஞ்சலியை தனது படத்தில் நடிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டார் களஞ்சியம்.

ஆனால் அஞ்சலியோ, எனக்கு அவர் முறையான அக்ரிமெண்டோ, சம்பளமோ பேசவில்லை என்று சொல்லி அப்படத்தில் இருந்து கழண்டு கொண்டார். இந்தநிலையில், சென்னையில் இருந்து ஆந்திரா சென்றபோது ஏற்பட்ட கார் விபத்தில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த டைரக்டர் மு.களஞ்சியம்.

தற்போது ஊர் சுற்றி புராணத்தை விட்டுவிட்டு இன்னொரு புதிய கதையை படமாக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்திலும் அவர்தான் ஹீரோவாம். மற்றபடி கதாநாயகி மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions