மீண்டும் இணைகிறது முதல்வன் ஜோடி!

Bookmark and Share

மீண்டும் இணைகிறது முதல்வன் ஜோடி!

தன் தாய்மொழியான கன்னடத்தில் அர்ஜுன் தற்போது கேம் என்ற கன்னடப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சயனைட், வனயுத்தம் ஆகிய படங்களை இயக்கியவர்.

சந்தன கடத்தல் வீரப்பன் கதையை வைத்து ஏ.எம்.அர்.ரமேஷ் இயக்கிய வனயுத்தம் படத்தில் போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் நடித்திருந்தார் அர்ஜுன். அந்த படத்திற்கு பிறகு கேம் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நடிக்கிறாராம்.  ஏற்கெனவே ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் அர்ஜுனுடன் நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா.

முதல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் கேம் படம் மூலம் அர்ஜுனுடன் இணைய இருக்கிறார் மனிஷா கொய்ராலா! கன்னடத்தில் தயாராகும் கேம் படத்தை  தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions