முக்தா கோட்சேவின் படக்குழுவினர் 8 பேர் நேபாள நிலநடுக்கத்தில் பலி

Bookmark and Share

முக்தா கோட்சேவின் படக்குழுவினர் 8 பேர் நேபாள நிலநடுக்கத்தில் பலி

நேபாளத்தில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கியிருக்கிறது. இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பாலிவுட் நடிகை முக்தா கோட்சேவின் படக்குழுவினர் 8 பேர் இந்த நிலநடுக்கத்திற்கு பலியான தகவல் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மநோஜ் தமான் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் முக்தா கோட்சே, படப்பிடிப்புக்காக கடந்த வாரம் சக நடிகர் ரஸ்லான் மும்தாஜுடன் நேபாளம் சென்றிருந்தார். போக்ராவில் முக்தா கோட்சே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பணியாற்றிய குழுவினரில் 8 பேர் நிலநடுக்கத்திற்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முக்தா கோட்சே, தனது படக்குழுவினர் இறந்த செய்தியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions